samantha : டூ பீஸில் தாறுமாறு போஸ்... கவர்ச்சியில் உச்சம் தொட்ட சமந்தா - கதிகலங்க வைக்கும் ஹாட் கிளிக்ஸ்...!

First Published | Apr 16, 2022, 1:36 PM IST

Samantha : டூ பீஸ் உடையில் நடிகை சமந்தா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் தாறுமாறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகின்றன.

நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

இதையடுத்து டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து தமிழில் விஜய், விக்ரம்,  சூர்யா, தனுஷ் (Dhanush) போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் சமந்தா.


பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மீது காதல் வயப்பட்ட சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா (Samantha). 

கடந்தாண்டு நாகசைதன்யாவுடன் (NagaChaitanya) திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார் சமந்தா. குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தாவின் (Samantha) மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

இவர் நடித்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்னேஷ் சிவன் (Vignesh shivan) இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. 

இதுதவிர சகுந்தலம், யசோதா, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் போன்ற பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ள சமந்தா (Samantha), இந்தியில் ராஜ் மற்றும் டீகே (Raj and DK) இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார் சமந்தா (Samantha). அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பாலோ செய்கின்றனர். 

ரசிகர்களை கவரும் விதமாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்ககளையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் நடிகை சமந்தா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் தாறுமாறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகி வருகின்றன.  

இதையும் படியுங்கள்... Beast Vs KGF 2 :வரவேற்பு இல்லாததால் தூக்கப்படும் பீஸ்ட்.. தமிழகத்திலும் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் கேஜிஎஃப் 2

Latest Videos

click me!