Beast Vs KGF 2 :வரவேற்பு இல்லாததால் தூக்கப்படும் பீஸ்ட்.. தமிழகத்திலும் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் கேஜிஎஃப் 2

First Published | Apr 16, 2022, 12:33 PM IST

Beast Vs KGF 2 : தமிழகத்திலும் பீஸ்ட் படத்தின் காட்சிகள் கணிசமாக குறைக்கப்பட்டு, கே.ஜி.எஃப் 2 படத்துக்கு தியேட்டர்கள் முன்னுரிமை கொடுக்கத்தொடங்கி உள்ளன.

பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே மவுடு உண்டு. அதுவும் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால், அது மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2-வும், அதற்கு முந்தைய தினம் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமும் வெளியிடப்பட்டன.

இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படமாக வெளியானதால் இந்தியா முழுவதும் இப்படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்ததால், இப்படத்தை தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிட்டனர். முதல் நாளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.


இப்படத்துக்கு போட்டியாக வந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படத்துக்கு தமிழகத்தில் 350 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தாலும், பிற மொழிகளில் பீஸ்ட்டை விட அதிகளவில் திரையிடப்பட்டன. இதன்காரணமாக முதல் நாள் வசூலில் கே.ஜி.எஃப் 2 படம் தான் முன்னிலை வகித்தது. இப்படம் முதல் நாளில் 134 கோடி ரூபாய் வசூலித்தது. அதேவேளையில் பீஸ்ட் படம் ரூ.73 கோடி வசூலித்திருந்தது.

விமர்சனரீதியாக பார்க்கும் போது பீஸ்ட் படம் கடும் சறுக்கலை சந்தித்தது. இதன் தாக்கம் இப்படத்தின் இரண்டாம் நாளில் வசூலில் எதிரொலித்தது. மறுபுறம் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், பெரும்பாலான இடங்களில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தை திரையிட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் பீஸ்ட் படத்தின் காட்சிகள் கணிசமாக குறைக்கப்பட்டு, கே.ஜி.எஃப் 2 படத்துக்கு தியேட்டர்கள் முன்னுரிமை கொடுக்கத்தொடங்கி உள்ளன. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால், கே.ஜி.எஃப் 2 படம் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் ஆகி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  The Delhi Files : காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த அதிரடி ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ - இது என்ன கதை தெரியுமா?

Latest Videos

click me!