அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி. அப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த சாக்ஷி, அதன்பின் பா.இரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து சைடு ரோலில் நடித்து வந்த சாக்ஷிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
24
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சாக்ஷி, ஆரம்பத்திலேயே கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்த காதல் காத்துவாக்குல கடந்து சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சாக்ஷிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது.
அதன்படி தற்போது இவர் கைவசம் பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான படங்களில் சாக்ஷி கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் உடன் இணைந்து பெயரிடப்படாத வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
44
இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாக்ஷி. அந்த வகையில் சேலையும், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து தற்போது அவர் நடத்தி உள்ள கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள், சேலையில் நீங்க நாட்டமை படத்தில் வரும் டீச்சர் போல் இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.