நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே, சமீபத்தில் இதன் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியானது.
இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா படம், ஜெய் பீம் இயக்குனருடன் ஒரு படம் என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பிளானை திடீரென மாற்றி உள்ளாராம் சூர்யா.
இதையும் படியுங்கள்... துணிவு டிரைலர் சாதனையை 4 மணிநேரத்தில் அடிச்சு துவம்சம் செய்த வாரிசு டிரைலர்
சிவா படம் முடிந்ததும், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடமும் வாடிவாசல் படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்பதுபோல தெரிகிறது.
வெற்றிமாறன் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் செம்ம பிசியாக உள்ளாராம் வெற்றிமாறன். அது முடிந்த பின்னர் தான் வாடிவாசல் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை அவர் தொடங்க உள்ளாராம். இதனால் தான் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சுதா கொங்கராவுக்கு கொடுத்துவிட்டாராம் சூர்யா.
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்