திருடி, பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. சமீப காலமாக, நடிகை நயன்தாரா பாணியை தேர்வு செய்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழ் படங்களை தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இந்த வருடம் எந்த ஒரு திரைப்படமும் வரவில்லை என்றாலும், விரைவில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் நடித்து வரும் 'கிட்ணா' என்கிற படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், யோகிடா, லாபம், இருட்டு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.