தகதகவென மின்னிய நீதா அம்பானி! ரேகா ஸ்டைலில் அசர வைத்த ஹைதராபாத் குர்தா, காடா துப்பட்டா!

First Published | Jul 13, 2024, 11:40 PM IST

நீதா அம்பானிக்காக இந்தத் தங்க நிற உடையை மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்திருக்கிறார். இது பழம்பெரும் நடிகை ரேகாவின் தனித்துவமான ஸ்டைல்.

Nita Ambani

ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் அனந்த் அம்பானி சனிக்கிழமை திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிரமாண்டமாக நடந்தன. திங்கட்கிழமை, ஹல்டி விழா நடைபெற்றது.

Nita Ambani

மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் நடைபெற்ற ஹல்டி விழாவிற்கு மணமகன் ஆனந்த் அம்பானியின் அம்மா  நீதா அம்பானி பழம்பெரும் நடிகை ரேகா ஸ்டைலில் ஹைதராபாத் குர்தாவும் கடா துப்பட்டாவும் அணிந்திருந்தார்.

Tap to resize

Nita Ambani

நீதா அம்பானிக்காக இந்தத் தங்க நிற உடையை மணீஷ் மல்ஹோத்ரா பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார். இந்த உடையில் வெள்ளியில் செய்யப்பட்ட நுட்பமான பார்டர் கொண்டிருந்தது.

Nita Ambani

ஹைதராபாதி குர்தாவில் வெள்ளி எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்ட முழுநீளக் கைகள் கொண்டது. பழங்கால ஜர்தோசி எம்பிராய்டரிகளால் அலங்கரிக்கப்பட்ட கடா துப்பட்டாவையும் கையில் சுற்றி அணிந்திருந்தார்.

Nita Ambani

இந்த உடைக்குப் பொருந்தமாக நீதா அம்பானி தங்க நிற மாங் டிக்கா மற்றும் ஸ்டேட்மென்ட் சில்வர் ஜும்காவை அணிந்திருந்தார். இது பழம்பெரும் நடிகை ரேகாவின் தனித்துவமான ஸ்டைல்.

Nita Ambani

நடிகை ரேகா சுடிதாருடன் கதா துப்பட்டாவும் ஹைதராபாத் குர்தாவும் அணிவது வழக்கம். ஹைதராபாத் குர்தா நுணுக்கமான எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அத்துடன் கடா துப்பட்டா கிளாசிக் லுக்கைக் கொடுக்கும்.

Nita Ambani

150 ஆண்டுகள் பழமையான இந்தப் பாரம்பரிய உடையை ஹைதராபாத் முஸ்லீம் பெண்கள் தங்களுக்குத் நிக்காஹ் (திருமணம்) நடக்கும்போது அணிவார்கள். இந்த உடை முகலாய காலத்தில், சுமார் 17ஆம் நூற்றாண்டில் இருந்து அணியப்பட்டு வருகிறதாம்.

Latest Videos

click me!