நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா போல் ஆகிடுமா? கஷ்டப்பட்டு வளர்த்த தாயை நினைத்து உருகும் விஜய் ஆண்டினி!

Published : Jul 13, 2024, 08:45 PM ISTUpdated : Jul 13, 2024, 08:53 PM IST

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது அம்மா குறித்து பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அம்மா தனியாக எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை வளர்த்தார் என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

PREV
17
நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா போல் ஆகிடுமா? கஷ்டப்பட்டு வளர்த்த தாயை நினைத்து உருகும் விஜய் ஆண்டினி!
VIjay Antony movie update

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.

27
VIjay Antony about mother's sacrifice

இந்தப் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தனஞ்செயன் தயாரித்து இருக்கிறார். சத்யராஜ், சரத்குமார், கன்னட நடிகர் டாலி தனஞ்செயா எனப் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

37
VIjay Antony about hard work of mother

சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ஆண்டனியும் இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார்.

47
Vijay Antony Latest News

இந்நிலையில், தனது அம்மா குறித்து விஜய் ஆண்டனி பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பா இறந்த பிறகு அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை வளர்த்தார் என்று நெகிழ்ச்சியாக நினைவுகூர்ந்துள்ளார்.

57
VIjay Antony Amma song

"எங்கப்பா இறந்த பிறகு, எங்க அம்மாவுக்கு வேலை நாகர்கோவிலில் இருந்தது. வீட்ல சமைச்சு முடிச்சுட்டு ஒரு 5 கிலோ மீட்டர் நடந்து போயிட்டு, பஸ் ஏறி மெயின் பஸ் ஸ்டாண்ட் போவாங்க. அங்கு இருந்து மறுபடியும் ஒரு கிலோமீட்டர் நடந்து போயிட்டு ட்ரெயின் புடிச்சு நாகர்கோவில் போவாங்க." என்று தெரிவித்துள்ளார்.

67
VIjay Antony about Amma

"நாகர்கோவில்ல இறங்கி அங்க இருந்து ஒரு பஸ் புடிச்சு ஆபீஸ் போவாங்க. மறுபடியும் இதே ரொட்டீன்ல திரும்ப வந்து எங்களுக்கு சமைச்சு போட்டு படுக்க வைப்பாங்க. அவங்க உழைப்பெல்லாம் கம்பேர் பண்றப்ப நம்ப ஒன்னுமே கிடையாது" என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

 

77
VIjay Antony about mother

விஜய் ஆண்டனி ரசிகர்கள் அவரது பிச்சைக்காரன் படத்தில் வரும் "நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னை போல் ஆகிடுமா?" என்ற பாடல் வரிகளைக் கூறி விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து அம்மாவை புகழ்ந்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories