கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்தியத் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இளம் இயக்குநர் அட்லீ, வேட்டி சட்டை அணிந்து பக்கா தமிழனாக இருக்கும் தோற்றத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததார்.
27
Atlee, Pooja Vibes
தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி மற்றொரு ஹிட் கொடுத்தார். இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அட்லீ - விஜய் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
37
Atlee, Pooja Vibes
அதற்குப் பின் மெர்சல், பிகில் என அட்லீ இயக்கிய அடுத்தடுத்த படங்களில் விஜய் நடித்தார். அந்தப் படங்களும் வசூல் வேட்டையில் தூள் கிளப்பியதால், தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார் அட்லீ.
47
Atlee, Pooja Vibes
பிகிலுக்கு அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பான் இந்தியா படத்தை அட்லீ இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான அந்தப் படம் வசூல் சாதனைகளை பாலிவுட்டிலும் அட்லீக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
57
Atlee, Pooja Vibes
ஜவான் படத்திற்காக அட்லி ரூ.32 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என்று தகவல் வெளியானது. டிமாண்ட் அதிகமானதை அடுத்து சம்பளத்தையும் நேக்காக அதிகரித்துவிட்டார். இப்போது அட்லீயின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 42 கோடி என்று சொல்லப்படுகிறது. இளம் வயதிலேயே இந்தியாவின் பணக்கார இயக்குனர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
67
Atlee, Pooja Vibes
ஜவான் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் அல்லு அர்ஜுன் படம் ஒன்றை அட்லீ இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், பிறகு அந்தப் படம் கைவிடப்பட்டது. ஷாரூக்கானைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து அட்லீ புதிய படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தில் கமலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி உறுதியான தகவல் வரவில்லை.
77
Atlee, Pooja Vibes
இந்நிலையில் இயக்குநர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகின்றன. ஆளப்போறான் தமிழன், தலைவன் அட்லீ என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.