‘இந்தியன் 2’ படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிப்பதற்காக கமல் உள்ளிட்ட நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. பிரமாண்டத்துக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
27
Indian 2
நாளை ரிலீஸ் ஆகும் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரைக்கு வருகிறது. தமிழில் 'இந்தியன் 2', ஹிந்தியில் 'ஹிந்துஸ்தானி 2' மற்றும் தெலுங்கில் 'பாரதீயுடு 2' என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
37
Indian 2
"இந்தியன் 2" படத்தில் கமல்ஹாசன் "இந்தியன்" படத்தைப் போலவே வீரசேகரன் சேனாபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த்தும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ், மனோபாலா ஆகியோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.
47
actor kamal haasan movie indian 2 Advance Sales Worldwide
ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், டெமி-லீ டெபோ ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
57
indian 2
"இந்தியன் 2" படம் சுமார் ₹250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் மட்டும் ரூ.150 கோடி பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. "விக்ரம்" படத்திற்காக ரூ.50 கோடியும், 'கல்கி 2898 AD' படத்திற்காக ரூ.40 கோடியும் வாங்கிய நிலையில், இந்தியன் 2 படத்தில் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி இருக்கிறார்.
67
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஜூன் 27 அறிக்கையின்படி, கமல்ஹாசன் 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். கமல் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார் கூறப்படுகிறது.
77
படக்குழுவில் உள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன் மற்றும் ஆர்.ரத்னவேலு, எடிட்டர் ஏ. ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் டி.முத்துராஜ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் வி. ஸ்ரீனிவாஸ் மோகன் ஆகியோரும் வழக்கத்தைவிட அதிகமான சம்பளத்தை கறாராகப் பேசி வசூல் செய்துவிட்டனர் என்றும் சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.