180 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சிம்புவின் அடுத்த படம்! பான் இந்தியா படத்துக்கு ரெடியாகும் STR!

Published : Jul 10, 2024, 05:44 PM IST

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை பெரிய ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்றும் பெரிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாகத் தயாரிக்க உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
16
180 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சிம்புவின் அடுத்த படம்! பான் இந்தியா படத்துக்கு ரெடியாகும் STR!
Simbu Next Movie

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சிம்பு சினிமாவை விட்டே விலகி விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்டனர்.

26
Simbu Next Movie Budget

உடல் எடை கூடி வாட்ட சாட்டமாக மாறிய எஸ்.டி.ஆர். நடிப்பிலும் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார். பிறகும் மீண்டும் இழந்த மார்க்கெ்டைப் பிடிப்பதற்காக தீயாக வேலை செய்ய ஆரம்பித்தார்.

36
Simbu Pan India Film

ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல என அடுத்தடுத்த படங்களில் நடித்தில், அவை கணிசமான வெற்றியையும் அவருக்குக் கொடுத்தன.

46
STR next movie update

இதனால் தமிழ் சினிமாவில் சிம்புக்கு மீண்டும் டிமாண்ட் உருவானது. உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு கமிட் ஆனார். அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் தயாராகும் தக்லைஃப் படத்திலும் அவருக்கு முக்கியான ரோல் கிடைத்துள்ளது.

56
Simbu Latest News

இப்போது சிம்புவின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்புவின் அடுத்த படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் அதன் பட்ஜெட் 180 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளன என்ற சொல்லப்படுகிறது.

66
Simbu with Mohan Lal

இதற்காக அர்ச்சனா கல்பாத்தி, தில் ராஜூ போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த மெகா பட்ஜெட் படத்தில் மோகன் லால் முக்கியமான கேரக்டரில் நடிப்பார் என்றும் தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories