கலைஞர் முன்பு அஜித் பேசிய பேச்சுக்கு இந்தச் சம்பவம் தான் காரணமாம்! வைரலாகும் புதிய அப்டேட்!

First Published | Jul 9, 2024, 4:37 PM IST

பல வருடம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் பேசிய துணிச்சலான பேச்சுக்குக் காரணம் என்ன என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Ajith Speech in front of Kalaignar Karunanidhi

2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் சார்பில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த அந்த விழாவில் நடிகர் அஜித் குமார் பேசியது ஒட்டுமொத்த திரை உலகையும் அதிர வைத்தது.

Ajith Bold Speech

அஜித்தின் அந்தப் பேச்சை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்தப் பேச்சுக்கு உடனடியாக பாராட்டும் கிடைத்தது. ரஜினி கலைஞர் அருகிலேயே அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அஜித்தின் அந்தப் பேச்சுக்கு காரணம் என்ன என்று புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Tap to resize

Rajinikanth applauds Ajith

“நீங்க எவ்வளவோ பிரச்சனைகளை தீர்த்து வச்சிருக்கீங்க. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமேல் இதுபோன்ற அரசியல் விழாக்களில் சினிமாக்காரர்கள் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ஐயா. ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி வர வைக்கிறாங்க" என்று கேட்டுக்கொண்டார்.

Ajith with Karunanidhi

அஜித்தின் துணிச்சலான, வெளிப்படையான பேச்சைக் கேட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் வாயடைத்து போய்விட்டனர். முதல்வர் கருணாநிதியும் தர்மசங்கடமான நிலையில் காணப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அஜித் கலைஞரை சந்தித்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

Ajith with Kalaingar

இந்நிலையில், இப்போது அஜித்தின் அந்தப் பேச்சுக்குக் காரணம் என்ன என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் அந்த தில்லான பேச்சுக்குக் காரணம் அவரது மனைவி ஷாலினி தான் என்று கூறப்படுகிறது.

Shalini with Ajith

விழாவுக்கு அஜித் தன் மனைவி ஷாலினியுடன் வந்தார். மற்றவர்களைப் போல மேடையில் சில வார்த்தைகள் கருணாநிதியைப் பாராட்டிவிட்டு வந்துவிடலாம் என்று தான் அஜித் நினைத்திருந்தார். விழா அரங்கிற்குச் சென்ற பிறகு, ஏற்பாட்டாளர்கள் அஜித்துக்கு மட்டும் இருக்கை ஒதுக்கி இருந்தனர். மனைவிக்கு அவருக்கு அருகில் இருக்கை ஒதுக்கவில்லை.

Ajith Kumar Shalini

பிறகு, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஷாலினியை தன் அருகில் அழைத்து அமர வைத்தாராம். இதனால், விழாவில் அஜித்தும் ஷாலினியும் ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தனர். எப்போதும்  மனைவுடன் செல்லும் இடங்களில் மனைவியை தன் அருகிலேயே வைத்துகொள்பவரான அஜித் இந்தச் சம்பவத்தால் மிகவும் கடுப்பாகிவிட்டார். விழா ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தி வரவைத்த மட்டுமில்லாமல், வந்த இடத்தில் மனைவிக்கு இருக்கை கூட ஒதுக்காமல் இருந்ததால் மிகவும் அதிருப்தி அடைந்தார். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் தன் மனதில் பட்டத்தை அப்படியே மேடையில் பேசிவிட்டார்.

Ajith Speech effect

அஜித்தின் அன்றைய பேச்சு இப்போது வரை மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் திரையுலகினர் கலைஞர் நூற்றாண்டை ஒட்டி நடத்திய பாராட்டு விழாவில், யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கவில்லை என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதுபோன்ற அறிக்கை வெளியிட, 2010ஆம் ஆண்டில் அஜித் பேசிய பேச்சுதான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

Latest Videos

click me!