'கல்கி 2898 ஏ.டி' படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் நன்றி கூறியுள்ளது.
பிரபாஸ், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட கல்கி 2898 ஏ.டி. படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1000 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
26
Kalki 2898 AD collection update
பிரபாஸ் நடிப்பில் பாகுபலி, பாகுபலி 2, சலார், ஆதி புருஷ் ஆகிய படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றன. அதைத் தொடர்ந்து பொன்விழா ஆண்டு கொண்டாடும் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தை எடுத்துள்ளது.
36
Kalki 2898 AD 1000 crore collection
நாக் அஸ்வின் இயக்கியுள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.
46
Kalki 2898 AD Box office collection
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 27ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்தே வேகமான வசூல் வேட்டை நடத்திவருகிறது.
56
Kalki Box office collection
புராணக் கதையுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. வில்லனாக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் கமல்ஹாசனுக்கும் பாராட்டு குவிகிறது.
66
Kalki Amitabh
இந்நிலையில், 'கல்கி 2898 ஏ.டி' படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.