Rambha Re-Entry: 47 வயதில் ரீ-என்ட்ரிக்கு தயாரான நடிகை ரம்பா! மீண்டும் நடிக்க வர இது தான் காரணமாம்.!

தமிழ் திரையுலகில் 90ஸ் கிட்சின் கனவு கன்னியாக வலம் வந்த, ரம்பா தன்னுடைய 47 வயதில் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா ஜோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆசை மீண்டும் வந்துள்ளது. 
 

ஏற்கனவே தெலுங்கு படத்தில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்க தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பச்சை கொடி காட்டி கதை கேட்டு வருகிறாராம் ரம்பா.

Karthigai Deepam: அபிராமியால் தீபாவுக்கு வந்த ஆப்பு, மலர் லெட்டரால் மாட்ட போவது யார்? கார்த்திகை தீபம் அப்டேட்
 


நடிகை தன்னுடைய 15 வயதில், மலையாள திரையுலகில் 1992 ஆம் ஆண்டு அறிமுகமான ரம்பா, இதை தொடர்ந்து, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 15 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்தார். 
 

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார். 15வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி குழந்தை - கணவர் என சந்தோஷமாக வாழ்த்து வரும் இவர், சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

90'ஸ் கிட்சின் கனவு கன்னியாகவும், தொடையழகி என்றும் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ரம்பாவுக்கு தற்போது 47 வயதாகும் நிலையில்,  மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்… "திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள்  என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 

வருண் - லாவண்யா திருமணம்! இத்தாலியில் ஒன்னு கூடி... மது பார்ட்டில் மஜா பண்ணும் மெகா ஸ்டார் குடும்பன்! போட்டோஸ்
 

சினிமாவை தொடர்ந்து கவனித்து  கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவில் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில்,  நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில்  பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!