தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், சமீபத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் படத்தில் கமிட்டாகியுள்ளார். முன்னணி நடிகைகளை விட இவருடைய கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ப்ளூ மூன் போன்ற பளீச் அழகில்... ரசிகர்களை அசரவைக்கும் அளவுக்கு பிரகாசத்துடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
ஸ்லிம் லுக்கில் ஸ்டைலிஷாக புடவை கட்டி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல் இவரது அழகை பல ரசிகர்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள்.