தமிழில் நடித்த 2 படங்களும், பிளாக் ஆனாலும் கூட சம்பள விஷயத்தில் கறாராக 5 கோடி கேட்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
25
Pooja Hegde Debut Movie:
பூஜா மும்பையைச் சேர்ந்த நடிகை என்றாலும், இவர் ஹீரோயினாக அறிமுகமானது தமிழ் படத்தில் தான். 2010 ஆம் ஆண்டு ஐ அம் ஷீ யுனிவர்ஸ் இந்திய அழகி போட்டியில், கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்ட பூஜா ஹெக்டே, பின்னர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜீவா நடிப்பில் உருவான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால், பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. பின்னர் தெலுங்கின் பக்கம் சாய்ந்த பூஜா சில வருடங்களில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். ஹிந்திலும் தன்னுடைய அளவு கடந்த கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை ஆர்கொண்டார்.
45
Pooja Hegde flop movies:
இவன் நடிப்பில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான ஹிட் படம் என்றால் அது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஆல வைகுண்டபுரமுலு திரைப்படம் தான். இதைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பீஸ்ட் உட்பட ராதேஷ் ஷாம், ஆச்சார்யா, Kisi Ka Bhai Kisi Ki Jaan ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன.
தோல்வி பட நாயகியாக இருந்தாலும், இவருக்கான டிமாண்ட் குறையாததால்... அம்மணியும் சம்பள விஷயத்தில் கராறாகவே உள்ளார். அதன் படி இவர் நடிக்கும் தென்னிந்திய மொழி படங்களுக்கு 5கோடி சம்பளமாகவும், ஹிந்தி படங்களுக்கு 7 கோடி சம்பளமாகவும் கேட்பதாக கூறப்படுகிறது. தற்போது இவரின் கைவசம், ஒரு ஹிந்தி படம் மற்றும் சூர்யாவின் 44 திரைப்படம் ஆகியவை இவரின் கைவசம் உள்ளது. சமூக வலைத்தளத்திலும் தனக்கென மிகப்பெரிய ஃபேன் ஃபாலோவர்சை வைத்திருக்கும் பூஜா ஹெக்டேவின் சிறிய வயது புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.