ஒரே நேரத்தில் அப்பா, மகனுக்கு ஜோடி.. சக நடிகருடன் 2-வது திருமண வதந்தி.. இந்த பிரபல நடிகை யாருன்னு தெரியுதா?

Published : Aug 03, 2024, 10:07 AM ISTUpdated : Aug 03, 2024, 04:13 PM IST

ஒரே நேரத்தில் அப்பா, மகன் இருவருக்கும் ஜோடியாக நடித்த பிரபல நடிகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
18
ஒரே நேரத்தில் அப்பா, மகனுக்கு ஜோடி.. சக நடிகருடன் 2-வது திருமண வதந்தி.. இந்த பிரபல நடிகை யாருன்னு தெரியுதா?

80களில் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலுமே உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அம்பிகா. 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் கோலோச்சி வந்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

28
ambika

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அம்பிகா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். 1979-ம் ஆண்டு வெளியான சக்காளத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் அம்பிகா நடித்திருந்தாலும் பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த அந்த 7 நாட்கள் படம் அவருக்கு பிரேக் த்ரூ படமாக அமைந்தது. 

38
ambika

இதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. கடல் மீன்கள், சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், நான் சிகப்பு மனிதன், காக்கி சட்டை, உயர்ந்த உள்ளம், இதய கோவில் என பல ஹிட் படங்களில் அவர் நடித்துள்ளார். 

48

ஒருகட்டத்தில் அப்பா, மகன் என இருவருக்கும் ஜோடியாக நடித்தார் அம்பிகா. ஆம். சிவாஜி மற்றும் பிரபு ஆகியோருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். வெள்ளை ரோஜா, திருப்பம் ஆகிய படங்களில் பிரபு ஜோடியாக நடித்த அம்பிகா அதே ஆண்டு வெளியான வாழ்க்கை என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனால் அந்த காலக்கட்டத்தில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. பத்திரிகைகளிலும் அம்பிகா குறித்து பல விமர்சனங்கள் வந்தது.

58
ambika

எனினும் இவை அம்பிகாவின் திரை வாழ்க்கையை பாதிக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்முட்டி, மோகன்லால், திலீப், ஷங்கர், என்.டி.ராமராவ், கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு, டாக்டர். ராஜ்குமார், அம்பரீஷ் மற்றும் சிரஞ்சீவி என பல தென்னிந்திய உச்ச நடிகர்களுடன் அம்பிகா ஜோடி சேர்ந்து நடித்தார்.

68

ambika

இதற்கு இடையே 1988-ம் ஆண்டு பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்த அம்பிகா அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக 1996-ம் இந்த தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

78
Actress Ambika

பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்த அவர் தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். அம்பிகா தனது கணவரை விவாகரத்து செய்த பின் நடிகர் ரவிகாந்தை 2-வது திருமணம் செய்ததாக தகவல் வெளியானது.

88

அம்பிகாவின் விக்கிப்பீடியா பக்கத்தில் கூட, அம்பிகாவின் 2-வது கணவர் ரவிகாந்த் என்றும் 2000-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடி, பின்னர் 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் பேசிய ரவிகாந்த் தான் அம்பிகாவின் கணவர் என்ற தகவலை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories