24 வயதே ஆகும் இளம் நடிகை அம்மு அபிராமி, பைரவா, என் ஆளோட செருப்ப காணோம், போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து... பின்னர் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் கார்த்திக்கின் தங்கையாக நடித்து கவனிக்கப்பட்டவர்.
26
Ratchashan Movie Child Artist:
ஆனால் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து தனுஷுடன் 'அசுரன்' படத்தில் மாரியம்மாள் ஆக வந்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த கண்ணகி, ஹாட்ஸ்பாட், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது கனவு மெய்ப்பட, யார் இவர்கள், போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
46
Jama Movie:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவருடைய நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜமா' கூத்து பட்டறை பின்னணி குறித்த அரசியலை எதார்த்தமாக பேசி உள்ள இந்த படத்தில், அம்மு அபிராமி ஹீரோயினாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் நாள் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறாமல் போனாலும், இப்படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் இனி வரும் நாட்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'ஜாம' படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவை பட குழுவினர் சந்தித்து வாழ்ந்து பெற்றனர். இதில் நடிகை அம்மு அபிராமியும் தன்னுடைய அப்பா அம்மாவுடன் சென்று இளையராஜாவே சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
66
Cook With Comali Fame
இந்தப் புகைப்படத்தில் அம்மு அபிராமியின் அம்மாவை பார்த்த நெட்டிசன்கள் பலர்... மகளையே பீட் பண்ணும் அழகில் அவரின் அம்மா இருப்பதாக கூறி வருகின்றனர். அம்மு அபிராமி, திரைப்படங்கள் மட்டுமின்றி 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, இரண்டாவது ரன்னர் ரப்பாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.