ரூ.1,500 கோடி சொத்து தான் காரணமா? 60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை

First Published | Aug 2, 2024, 11:17 PM IST

ரூ.1,500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகர் நரேஷ் பாபுவை நடிகை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து கொண்டதாக அவரது முன்னாள் கணவர் குற்றம் சாட்டி உள்ளார்.

மகேஷ் பாபுவின் சகோதரர்

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரரான நரேஷ் பாபுவும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 60 வயதை கடந்துள்ள நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி அவை விவாகரத்தில் முடிந்துள்ளது. நரேஷ்பாபு முதலாவதாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

3 முறை விவாகரத்து

பின்னர் ரேகா சுப்ரியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கும் ஒரு ஆண் குழந்தை நிலையில், உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரேகாவையும் விவாகரத்து செய்தார். பின்னர் 50 வயதில் ரம்யா ரகுபதி என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் நரேஷ். இந்த உறவும் கசந்த நிலையில் இதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. 

Tap to resize

பவித்ரா லோகேஷ் மீது காதல்

இறுதியாக 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷ் மீது காதல் கொண்ட நிலையில் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். நரேஷின் நான்காவது மனைவியான பவித்ராவுக்கு வயது 44. இவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை பவித்ரா லோகேசும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்த நிலையில், பவித்ரா லோகேஷ் குறித்து அவரது முதல் கணவர் சுரேந்திர பிரசாத் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

4வது திருமணம்

அதன்படி பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர். நரேஷ் பாபுவிடம் 1500 கோடி சொத்து இருப்பதன் காரணமாக தான் அவர் நரேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார். காசுக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார் எனவும் கூறி இருக்கிறார். அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos

click me!