கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறையாக மாறியுள்ள நிலையில், அவர்களை மீட்டெடுக்கும் வகையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
கண்ணுக்கு குளிர்ச்சியாக, எங்கு பார்த்தாலும், பச்ச பசேல் என இயற்கையின் பேரழகோடு திகழும் கேரளாவில், இப்போது அந்த இயற்கையே மக்களை வஞ்சிக்கும் வகையில், கோர முகம் காட்டியுள்ளது.
25
Wayanad Landslide disaster
கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால், ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது 500-க்கும் மேற்பட்ட குடும்பம். மக்கள் பலர் தங்களுடைய உடமை, உறவு, போன்றவற்றை இழந்து தவித்து வருகின்றனர்.
வாகனம், வீடு, மற்றும் குருவி போல் பொத்தி பொத்தி சேர்த்து வைத்த மொத்தத்தையும் மண்ணுக்கு இரையாக்கி விட்டு, மொத்தத்தையும் இழந்து... தங்களின் ஊரிலேயே ஒரு அகதியை போல் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட மக்களின் நிலை என்ன? என்பதே தெரியாமல் உள்ளது.
45
Wayanad Disaster
கடந்த மூன்று நாட்களாக இயற்கையின் பிடியில் இருந்து மக்களை மீட்க மத்திய மற்றும் மாநில பேரிடர் குழு, ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், வான்படை வீரர்கள், கடற்படை வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். மேலும் மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டு வர, முதல்வரின் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து வரும் நிலையில், தற்போது நயன்தாராவும் ரூ.20 லட்சம் கொடுத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகம், ஆந்திரா, போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு நீர் உடை அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.