நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படத்தின் புரோமோஷனின் போது, தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பிரபல தமிழ் நடிகர் தான் சிறந்த டான்ஸர் என கூறி சிரஞ்சீவி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்திய திரையுலகில், ஹோம்லி மற்றும் மாடர்ன் லுக் என இரண்டிலும் பொளந்து கட்டி வரும் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநடி' படத்தில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதையும் வென்றார்.
25
Keerthy suresh Debut in Bollywood
நடிப்பில் அம்மாவையே மிஞ்சிவிட்ட கீர்த்தி... பாலிவுட் திரையுலகிலும் ஹீரோயினாக மாறியுள்ளார். இயக்குனர் அட்லீ, 'ஜவான்' படத்தை தொடர்ந்து, ஹிந்தியில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள 'பேபி ஜான்' படத்தில் தான் கீர்த்தி வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'தெறி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி தெலுங்கில் நடித்த படத்தின் புரோமோஷனில்... சிரஞ்சீவியுடன் பிரபல நடிகரை ஒப்பிட்டு தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, அதற்க்கு தமிழ் நடிகரின் பெயரை கூறியுள்ளது தான், சிரஞ்சீவி ரசிகர்களின் கோபத்தை தூண்டியது. இதற்காக கீர்த்தி சுரேஷ் அந்த சமயத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
45
Thalapathy Vijay is Best Dancer:
அல்லு அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி இவர்கள் இருவரில் யார் நடனம் உங்களுக்கு பிடிக்கும் என தொகுப்பாளர் தனுஷ், நடிகை நானியிடம் கேட்டபோது அவர் சிரஞ்சீவியை தான் கூறினார். இதே கேள்வியை கொஞ்சம் மாற்றி நீங்கள் சிறந்த டான்சராக நினைப்பது விஜய்யையா அல்லது சிரஞ்சீவியையா என கேட்டபோது... அவர் விஜய் தான் சிறந்த டான்ஸர் என கூறினார்.
தன்னுடைய 68 வயதிலும், இளம் ஹீரோக்களுக்கு நிகராக, மூன் ஸ்டெப் முதல்... மிகவும் கடுமையான மூமென்ட்டை கூட அசால்டாக போடும் சிரஞ்சீவியை விட விஜய் எந்த விதத்தில் கீர்த்திக்கு சிறந்தவரானார் என்பது தான் தெலுங்கு ரசிகர்களின் கோபத்திற்கு காரணம். சில நாட்கள் மட்டுமே இந்த விஷயம் பேசப்பட்டாலும், பின்னர் வழக்கம் போல் மறந்து போனது.