ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம்... சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தனுஷின் ராயன்

First Published | Aug 2, 2024, 2:44 PM IST

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ராயன் திரைப்படத்திற்கு ஆஸ்கரில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Raayan

நடிகனாக பல்வேறு சாதனைகளை படைத்த தனுஷ், தற்போது இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். ராயன் அவர் இயக்கிய இரண்டாவது படமாக இருந்தாலும், அப்படத்தில் தான் அவர் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். 

Raayan Dhanush

அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. ரிலீஸான ஆறே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது ராயன். தனுஷ் இயக்கிய படங்களில் 100 கோடி வசூலித்த முதல் படம் இதுவாகும். 

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸும் இல்ல, கல்கியும் இல்ல... பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபம் பார்த்த ஒரே படம் எது தெரியுமா?

Tap to resize

Raayan creates record

அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று, ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் ராயன் என்கிற சாதனையையும் அப்படம் படைத்துள்ளது. ஒருவாரத்தை கடந்தும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது ராயன். ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சமயத்தில் மற்றுமொரு ஸ்வீட்டான விஷயத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. 

Raayan selected for Oscars library

அதன்படி ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ராயன் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. ராயன் படத்திற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால் படக்குழுவும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அப்படியே அம்மா சாயிஷாவை உரித்து வைத்திருக்கும் ஆர்யா மகள் அரியானா! 3-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Latest Videos

click me!