போலீஸ் டூ கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன்.. ஒரு படத்துக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

First Published | Aug 2, 2024, 2:06 PM IST

ஒரு காலத்தில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்ட ஒரு இளைஞன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் யார்? அவரின் சொத்து மதிப்பு என்ன? என்பதை பார்க்கலாம்.

Sivakarthikeyan Salary

தமிழ் திரையுலகில் நடிகராக மாறுவது என்பது பெரும் கஷ்டம் தான். ஆனால் அதனையெல்லாம் தன்னுடைய உழைப்பால் சாத்தியமாக்கி டாப் 10 ஹீரோவாக மாறியுள்ளவரை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். கோலிவுட்டின் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள அவர், ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். அவர் வேறுயாருமில்லை, பிரின்ஸ் என்றும், எஸ்கே என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர்.

Sivakarthikeyan

பொறியியல் பட்டதாரியான சிவகார்த்திகேயன், முதலில் தனது தந்தையின் வழியைப் பின்பற்றி போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இருப்பினும், தனது தந்தையை இழந்த பிறகு, அவர் தனது குடும்பத்துக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கை பயணத்தை மாற்றினார். சிவகார்த்திகேயன் தனது நடிப்புத் திறமை மட்டுமின்றி கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார். அவர் ஒரு ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகராக தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.


Sivakarthikeyan Net Worth

2007 இல் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பட்டத்தை வென்றார். இயக்குனர் பாண்டிராஜின் மெரினா திரைப்படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல் என வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்தார். விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் உள்பட பல படங்கள் வெளியாக உள்ளது. அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

sk23

மேலும் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸுடன் தற்காலிகமாக எஸ்கே 23 என்று பெயரிடப்பட்ட படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். அதேபோல சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் விரைவில் சிவகார்த்திகேயனும் இனைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் எஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amaran

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மற்ற நடிகர்களான தளபதி விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஒப்பிடும்போது குறைவுதான். அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு சுமார் 120 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Diwali Release Movies : சிவகார்த்திகேயனின் அமரனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் ஜெயம் ரவி படம்

Latest Videos

click me!