2024ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சோகமான ஆண்டாக இருந்தாலும் மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளுக்கு ஒரு சக்சஸ்புல் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் படங்கள் 100 கோடி வசூலிப்பதே அரிதான விஷயமாக உள்ளது. அப்படி இருக்கையில் மலையாள சினிமா இந்த வருடம் சக்கைப்போடு போட்டு வருகிறது. முதல் ஆறு மாதங்களிலேயே மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், ஆவேஷம் என நான்கு 100 கோடி வசூல் படத்தை கொடுத்துவிட்டது.
24
kalki 2898 ad
அதேநேரத்தில் தமிழ் சினிமாவில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் என மூன்று படங்கள் மட்டுமே 100 கோடி வசூலித்து ஹிட் அடித்துள்ளன. அதே வேளையில் தெலுங்கில் ஹனுமன் திரைப்படம் மாஸ் வெற்றி பெற்று ரூ.350 கோடி வசூலித்து இருந்தது. மறுபக்கம் பிரபாஸின் கல்கி 2898AD திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இருப்பினும் அதிக லாபம் பார்த்த படங்கள் பட்டியலில் கல்கிக்கு முதலிடம் கிடைக்கவில்லை.
அந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்த படம் பிரேமலு. மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த பிரேமலு திரைப்படம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.136 கோடி வசூலித்து இருந்தது. இது கம்மியான வசூலாக தெரியலாம். ஆனால் அப்படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் மிகப்பெரிய வசூல் ஆகும். ஏனெனில் பிரேமலு படம் வெறும் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் லாபம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிகம். அதாவது 4 ஆயிரத்து 500 சதவீதம் ஆகும்.
44
Hanuman, Kalki 2898AD
மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம் போன்ற படங்களும் அதிக லாபம் ஈட்டி இருந்தாலும் பிரேமலு அளவுக்கு இல்லை. பிரேமலுவுக்கு அடுத்தபடியாக தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படம் வெறும் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடி வசூலித்தது. இப்படமும் பட்ஜெட்டை விட 775 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது. ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய கல்கி 2898AD திரைப்படம் 70 சதவீதத்திற்கும் குறைவான லாபத்தை ஈட்டி இருக்கிறது.