3 முறை கல்யாணம் ஆனவர் ஆனா வனிதா இல்ல... டைவர்ஸுக்கு பின் டாப் ஹீரோவை கரம்பிடித்து செட்டில் ஆன இந்த நடிகை யார்?

Published : Aug 02, 2024, 01:55 PM IST

1980-களில் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
18
3 முறை கல்யாணம் ஆனவர் ஆனா வனிதா இல்ல... டைவர்ஸுக்கு பின் டாப் ஹீரோவை கரம்பிடித்து செட்டில் ஆன இந்த நடிகை யார்?
Radhika

தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் நடிகர்களுள் ஒருவர் எம்.ஆர்.ராதா. அவரின் மகள் ராதிகாவும் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராதிகா.

28
Radhika Sarathkumar

தனது வெகுளித்தனமான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ராதிகா, கிழக்கே போகும் ரயில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பின்னர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்தார் ராதிகா.

38
prathap pothen, Radhika Sarathkumar

சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்த ராதிகாவுக்கு, திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. அவர் முதன்முதலில் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தனை காதலித்து கடந்த 1985-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். 

48
Radhika photos

பிரதாப் போத்தன் இயக்கி ஹீரோவாகவும் நடித்த மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் ஹீரோயினாக நடித்தபோது ராதிகாவுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. 1986-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... Diwali Release Movies : சிவகார்த்திகேயனின் அமரனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் களமிறங்கும் ஜெயம் ரவி படம்

58
Radhika Sarathkumar latest photos

பிரதாப் போத்தனுடனான விவாகரத்துக்கு பின்னர் ரிச்சர்டு ஹார்டி என்பவரை கடந்த 1990-ம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் ராதிகா. இந்த ஜோடிக்கு ரயானே என்கிற மகளும் இருக்கிறார். ராதிகாவின் இரண்டாவது திருமணமும் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

68
Sarathkumar wife Radhika

இதையடுத்து சரத்குமாருக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்த ராதிகா, அவர் மீது காதல் வயப்பட்டு, அவரையே 3வது திருமணம் செய்துகொண்டார். கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்.

78
Radhika sarathkumar family

சரத்குமாரை கரம்பிடித்த பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய ராதிகா, அதில் சித்தி, செல்வி, அண்ணாமலை, வாணி ராணி போன்ற பல்வேறு ஹிட் சீரியல்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய ராடன் மீடியா நிறுவனம் மூலம் பல்வேறு ஹிட் சீரியல்களையும் தயாரித்து உள்ளார்.

88
Radhika Sarathkumar rare childhood photo

அண்மையில் அரசியலில் காலடி எடுத்து வைத்த ராதிகா, தன் கணவரோடு பாஜகவில் சேர்ந்ததோடு மட்டுமின்றி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். விருதுநகர் தொகுதியில் நின்ற ராதிகாவுக்கு வெற்றி கிட்டவில்லை. இப்படி சினிமா, சின்னத்திரை, அரசியல் என ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ராதிகா, சின்ன வயதில் க்யூட் பேபியாக இருந்தபோது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நடிகர் பிரஷாந்துக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா? ப்ரீத்தி தியாகராஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

Read more Photos on
click me!

Recommended Stories