அப்படியே அம்மா சாயிஷாவை உரித்து வைத்திருக்கும் ஆர்யா மகள் அரியானா! 3-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

First Published | Aug 2, 2024, 2:24 PM IST

கோலிவுட் திரை உலகின் நட்சத்திர தம்பதியான ஆரியா மற்றும் சாயிஷாவின் மகள் அரியானாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சாயிஷா வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Arya Power Pack Movies

கோலிவுட் திரையுலகில், 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா, இதை தொடந்து நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, சார்பட்டா போன்ற தரமான படங்களை தேர்வு செய்து நடித்து, தனக்கென ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

Arya Love Sayyeshaa

ஆர்யா இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது சாயிஷாவை காதலிக்க துவங்கினார். ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு சாயிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் சாயிஷாவின் பிடிவாதத்தால் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

நடிகர் பிரஷாந்துக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா? ப்ரீத்தி தியாகராஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

Tap to resize

Arya and Sayyeshaa Daughter Ariana

திருமணத்திற்கு பின்னர் ஆர்யாவுடன் 'டெடி' என்கிற திரைப்படத்திலும், புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்த திரைப்படத்திலும் மட்டுமே சாயிஷா நடித்த நிலையில், அதன் பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.  ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருந்த தகவலை கூடஇருவரும்  மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில், விஷால்... ஆர்யாவுக்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து கூறிய போது தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

Ariana Birthday Celebration Photos

ஆர்யா - சாயிஷா இருவரும் தங்களின் மகளுக்கு அரியானா என பெயர் வைத்த நிலையில், சாயிஷா அடிக்கடி தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இன்று தன்னுடைய மூன்றாவது வயதில் அடி எடுத்து வைத்துள்ள அரியானாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சாயிஷா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார். தன்னுடைய குட்டி நண்பர்களுடன் அரியானா பிங்க் நிற பைஜாமா அணிந்து இளவரசி போல் தலையில் கிரீடத்துடன் கொண்டாடியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

3 முறை கல்யாணம் ஆனவர் ஆனா வனிதா இல்ல... டைவர்ஸுக்கு பின் டாப் ஹீரோவை கரம்பிடித்து செட்டில் ஆன இந்த நடிகை யார்?

Latest Videos

click me!