தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி, திருமணத்திற்கு பிறகும் சுதந்திர காதல் பறவைகளாகவே சுற்றிக்கொண்டு உள்ளனர். திருமணம் ஆன கையேடு, ஹனி மூன் கொண்டாட, தாய்லாந்து பறந்த இந்த காதல் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளது.
சினிமா நடிகர் - நடிகைகளை மிஞ்சும் விதத்தில், செம்ம ஹாட் ரொமான்ஸ் செய்துள்ளனர் இருவரும். ஸ்பெயின் சாலையில் நின்றபடி... நயன்தாரா குட்டை டவுசரில், விக்னேஷ் சிவன் மீது சாய்ந்து, சாய்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான லோகேஷன் பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளாராம். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இருவரும் ஜோடியாக சென்று ஹனி மூன் கொண்டாடி கொண்டே லோகேஷன் பார்த்து வருகிறார்கள்.