அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நைனிகா. முதல் படத்திலேயே தன்னுடைய மழலை பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நைனிகா.
அட்லி - விஜய் கூட்டணியில் வெளியான இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால், அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார்.
'தெறி' படத்தில் செம்ம கியூட் குழந்தையாக இருந்த, நைனிகா தற்போது நன்கு வளர்ந்து விட்டார். அவ்வப்போது தன்னுடைய அம்மா மீனாவுடன் சேர்ந்து போட்டோ சுட புகைப்படங்களும் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட மீனாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ சூட் ஒன்றில், ஊதா நிற உடையில் அம்மா மீனாவுடன் நைனிகா எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது நைனிகா, சிவப்பு நிற பட்டு பாவாடை சட்டையில் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அம்மாவையே அழகில் மிஞ்சும் பெண்ணாக, கழுத்தில் வைர நெக்லஸ், இடுப்பில் ஒட்டியாணம் என... அழகு தேவதையாக ஜொலிக்கிறார். அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாரா? என அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது இந்த ரீசென்ட் போட்டோஸ்.