Raashii Khanna: ஆரஞ்சி பழத்தை உரிச்சு வச்ச போல் அதிரி புதிரி... கவர்ச்சி உடையில் அட்டகாசம் செய்யும் ராஷி கண்ணா

First Published | Nov 26, 2021, 1:45 PM IST

குதூகல கவர்ச்சியால் இளம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், நடிகை ராஷி கண்ணா (Raashii Khanna) தற்போது சும்மா ஆரஞ்சி நிற உடையில்... தினுசு தினுசாக கவர்ச்சி காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இதை தொடர்ந்து தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழில் இளம் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக, நயன்தாரா - விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர், அதை தொடர்ந்து... தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.

Tap to resize

சமீபத்தில் கூட இவர் இயக்குனர் சுந்தர் சி, இயக்கி தயாரித்த 'அரண்மனை 3' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரை சுற்றியே கதை நகர்வது போல் இருந்ததால், வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் இவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றது.

நடிப்பை தொடர்ந்து, சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் ஆர்வம் கொண்ட இவர், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, உணவில்லாமல் சாலையோரம் இருக்கும் மக்களை தேடி சென்று உணவு வழங்கி வந்ததையும் வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற போட்டி போட்டு வரும், ராஷி கண்ணா... தற்போது, ஆரஞ்சு நிற உடையில் அசரவைக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஹிந்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கானுடன் கலந்து கொண்ட போது... இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

Latest Videos

click me!