வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை பட வில்லன் ஜான் கொகேன், நடிகர் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வில்லன் வேடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் 90 சதவீதம் படமாக்கப்பட்டு விட்டதால் தற்போது அவருக்கு இயக்குனர் எச்.வினோத் ஓய்வு அளித்துள்ளார்.
இதையடுத்து வெளிநாட்டுக்கு கிளம்பிய நடிகர் அஜித் அங்கு தன் நண்பர்களுடன் பைக் ட்ரிப் சென்றுள்ளார். அவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த சமயத்தில் அஜித் தவிர இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் எச்.வினோத். அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்துள்ளார் மஞ்சு வாரியர்.