Vikram : நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி இல்ல... ஓப்பனாக பேசி ரசிகர்களை பக்குனு ஆக்கிய 'விக்ரம்' பட நடிகை

Published : Jun 24, 2022, 01:54 PM IST

vikram : கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகைகளுக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், அவர்களது கேரக்டர்கள் ஒவ்வொன்றும் மனதில் பதியும்படி இருந்தது. 

PREV
14
Vikram : நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி இல்ல... ஓப்பனாக பேசி ரசிகர்களை பக்குனு ஆக்கிய 'விக்ரம்' பட நடிகை

கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ட்ண்ட் காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் உருவாக்கி இருந்தனர்.

24

இவ்வாறு மாஸான கூட்டணியில் உருவான இப்படம் கடந்த ஜூன் 3-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசானது. வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் 20 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

34

விக்ரம் படத்தில் நடிகைகளுக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், அவர்களது கேரக்டர்கள் ஒவ்வொன்றும் மனதில் பதியும்படி இருந்தது. அந்த வகையில் விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடித்திருந்த மாயாவின் கேரக்டரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக படுக்கையறை காட்சியில் இவர் கொடுத்த எக்பிரஷன்களும், அதற்கு அனிருத் போட்ட பின்னணி இசையும் வேறலெவல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

44

சமீபத்திய பேட்டியில் விக்ரம் பட கதாபாத்திரம் குறித்து நடிகை மாயா பேசி உள்ளார். அப்போது அவர் கூறுகையில், “லோகேஷ் என்னிடம் வந்து எதார்த்தமாக நடிக்கனும்னு சொன்னார். எல்லாவற்றையும் ஈஸியா எடுத்துக் கொள்வது தான் என்னுடைய கேரக்டர். நான் ஒன்னும் பெரிய உத்தமி இல்ல. படத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்குறாங்களோ அதை நன்றாக நடித்துக் கொடுப்பது தான் என்னுடைய வேலை. அதை தான் விக்ரமிலும் செய்தேன்” என போல்டாக பதிலளித்துள்ளார் மாயா. 

இதையும் படியுங்கள்... ஹெல்மெட் போட்டு வந்தா பெட்ரோல் இலவசம்... நடிகர் விஜய்யால் கிடைத்த அதிரடி ஆஃபர் - அலைமோதிய கூட்டம்

Read more Photos on
click me!

Recommended Stories