தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டு, முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தவர் தான், நடிகை மாளவிகா மோகனன். ஆக்சுவலாக இவர் கோலிவுட்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில், குணச்சித்திர நடிகையாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் தான் நடித்தார். அந்த வகையில் இவரது காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், இந்த படத்தின் திருமுனையை ஏற்படுத்தும் அழுத்தமான ரோலாக இருந்தது.