KPAC Lalitha : மொழிகடந்து வெற்றிவாகை சூடியவர்.... மறைந்த நடிகை கேபிஏசி லலிதாவின் தமிழ் சினிமா பயணம் ஒரு பார்வை

Ganesh A   | Asianet News
Published : Feb 23, 2022, 06:09 AM ISTUpdated : Feb 23, 2022, 06:11 AM IST

தமிழில் விஜய்யின் காதலுக்கு மரியாதை, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, காற்று வெளியிடை, அஜித்தின் கிரீடம், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார் லலிதா.

PREV
18
KPAC Lalitha : மொழிகடந்து வெற்றிவாகை சூடியவர்.... மறைந்த நடிகை கேபிஏசி லலிதாவின் தமிழ் சினிமா பயணம் ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகமானது மொழி வேறுபாட்டை மறந்து திறமை இருப்பவர்களை எப்போதும் தன்னகத்தே வைத்துக் கொள்ளும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். கலைக்கு மொழி ஏது என்று கூறுவதும் இதன் அடிப்படையில் தான். மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் பரதனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கமலின் கலையுலகில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான தேவர் மகனை இயக்கியவர். 

28

மலையாளத்தில் பெரும் புகழ் பெற்ற இயக்குநர். இவரது மனைவி கேபிஏசி லலிதா (KPAC Lalitha). கேரள உலகில் ஆக சிறந்த குணச்சித்திர நடிகை. இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்தவர். தமிழ்நாட்டில் மனோரமா போன்று இவர் மலையாளத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

38

தமிழிலும் விஜய்யின் காதலுக்கு மரியாதை, மணிரத்னம் (Maniratnam) இயக்கிய அலைபாயுதே, காற்று வெளியிடை, அஜித்தின் கிரீடம், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 74 வயதான நடிகை லலிதா, கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

48

கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலைப் பிரிவாக கடந்த 1950-களில் தொடங்கப்பட்ட கேரள பீப்புள்ஸ் ஆா்ட்ஸ் கிளப் (KPAC) என்பதன் மூலம் பிரசார நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய லலிதா, அந்தக் குழுவின் பல பிரபல நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளாா். அதன் காரணமாக இவர் கேபிஏசி லலிதா என்றே அழைக்கப்பட்டார். 
 

58

1969-ல் இருந்தே மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகையாக கலக்கி வந்த லலிதா, கடந்த 1980-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ராஜபார்வை (Raja paarvai) படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தை பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார்.

68

இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பின் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் லலிதா (Lalitha). இப்படத்தில் நடிகை ஷாலினியின் தாயாராக நடித்து அசத்தி இருந்தார் லலிதா. பின்னர் பிரபல மலையாள நடிகர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய சிநேகிதியே படத்தில் நடித்தார். திரில்லர் படமான இதில் நடிகைகள் ஷர்பானி முகர்ஜி, ஜோதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

78

அதேபோல் மணிரத்னத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான அலைபாயுதேவில் நடிகர் மாதவனுக்கு தயாராக நடித்து அசத்தி இருந்தார் லலிதா. பின்னர் ஷியாமின் உள்ளம் கேட்குமே, சத்யராஜின் சுயெட்சை எம்.எல்.ஏ, அஜித்தின் பரமசிவன், கிரீடம், மணிரத்னத்தின் காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்தார்.

88

இதுதவிர இவர் நடித்த மாமனிதன் (Maamanithan), வீட்ல விசேஷங்க ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை. இதில் மாமனிதன் படத்தை சீனு ராமசாமியும், வீட்ல விசேஷங்க படத்தை ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே நடிகை லலிதா தமிழில் நடித்த கடைசி படமாகும்.

இதையும் படியுங்கள்... KPAC Lalitha Death : தேவர்மகன் பட இயக்குனரின் மனைவியும், நடிகையுமான லலிதா காலமானார்

click me!

Recommended Stories