தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2000-ம் ஆண்டு நடிகை குஷ்புவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய நடிகை குஷ்பு, அரசியலில் களமிறங்கினார்.