அஜித்தின் மச்சினிச்சியா இது? இணையத்தை கலக்கும் ஷாமிலியின் செம்ம ஹாட் போட்டோஸ்

First Published | Jun 29, 2023, 1:14 PM IST

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் உடன் பிறந்த தங்கையும், நடிகையுமான ஷாமிலியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

shamlee

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரின் மனைவி ஷாலினிக்கு ஷாமிலி என்கிற சகோதரி உள்ளார். இவர் சிறுவயதிலேயே பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். விஜயகாந்தின் ராஜ நடை தான் ஷாமிலி முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த படமாகும்.

shamlee

இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்த ஷாமிலிக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்த திரைப்படம் தான் அஞ்சலி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் அஞ்சலி பாப்பாவாக நடித்திருந்ததே ஷாமிலி தான். அவரின் நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து அப்படத்தின் வெற்றிக்கும் வித்திட்டது.


shamlee

நடிகை ஷாமிலியை தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி இருந்தாலும், அவரை ஹீரோயினாக்கியது தெலுங்கு சினிமா தான். தெலுங்கு வெளியான ஒய் என்கிற திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார் ஷாமிலி.

shamlee

தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர சிவாஜி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஷாமிலி. இப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஷாமிலி.

இதையும் படியுங்கள்... 39 வயதில் மாரடைப்பு... பிரபல பாடகர் திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

shamlee

சினிமாவிற்கு முழுக்கு போட்ட பின்னர் ஓவியக் கலையில் ஆர்வம் செலுத்த தொடங்கிய ஷாமிலி, பல்வேறு விதமான ஓவியங்களை வரையத்தொடங்கினார். அவரின் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக நடத்தி இருந்தார் ஷாமிலி.

shamlee

சமீபத்தில் சென்னையில் ஷீ என்கிற ஓவியக் கண்காட்சியில் ஷாமிலி வரைந்த ஓவியங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், தோட்டா தரணி என பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

shamlee

ஓவியக்கலையில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஷாமிலி. அந்த வகையில் நடிகை ஷாமிலி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் அந்த போட்டோக்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

Latest Videos

click me!