ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும், ஜனனி என்கிற பெண்ணை மையமாக வைத்து பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது 'எதிர்நீச்சல்' தொடர். இதில் இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து குணசேகரன் என்கிற வலிமையான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது இந்த சீரியலில், ஆதிரையை அவரின் காதலனுக்கு திருமணம் செய்து வைக்காமல்... குணசேகரன் கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், அதனை ரிஜிஸ்டர் செய்யவும் முயற்சித்து வருகிறார். எனவே அடுத்து என்ன நடக்கும்? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து, பிரபல நடிகர் வெளியேற உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.