கோலிவுட்டில் 1990-களில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு, கஸ்தூரி ராஜா இயக்கிய 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, நடிப்பில் பிசியான கஸ்தூரி, அடுத்தடுத்து ராசாத்தி வரும் நாள், பிரபு ஜோடியாக சின்னவர், கவர்மெண்ட் மாப்பிள்ளை, உண்மை ஊஞ்சலாடுகிறது, அபிராமி, செந்தமிழ் பாட்டு போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.
25
நடிகை கஸ்தூரியின் திரைப்பயணம்
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் கவனம் செலுத்திய கஸ்தூரி, கடந்த 1992 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடினார். பின்னர் ஃபெமினா மிஸ் மெட்ராஸ் பியூட்டி பேஜன்ட் உள்ளிட்ட அழகி போட்டிகளிலும் களமிறங்கி பட்டம் பெற்றிருந்தார். நடிகை கஸ்தூரி சினிமாவில் சாதிக்க அவருக்கு பக்கபலமாக இருந்தது அவரின் அப்பா - அம்மா தான். பிராமின் குடும்பத்தை சேர்ந்தவரான கஸ்தூரி, பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என சொல்வதை போல் பிறக்கும் போதே மிக வசதியான குடும்பத்தில் பிறந்தார்.
35
நடிகை கஸ்தூரி குடும்பம்
நடிகை கஸ்தூரியின் தாயார் சுமதி ஒரு வழக்கறிஞர், அவருடைய தந்தை பெயர் ஷங்கர், அவர் ஒரு என்ஜினீயர். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும், நடிகை கஸ்தூரிக்கு மாடலிங் துறையில் தான் அதிக ஆர்வம் இருந்ததாம். இதனால் இவர் ஆசைப்பட்டபடியே நடிகை ஆனார். அம்மா வழக்கறிஞர் என்பதால் கஸ்தூரியை சிறு வயதில் இருந்தே தைரியமான பெண்ணாக வளர்த்திருக்கிறார். இதனால் அவர் தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை ஓப்பனாக பேசி விடுவார். இதன் காரணமாகவே பல நேரங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார் கஸ்தூரி.
51 வயதாகும் கஸ்தூரி தன்னுடைய எக்ஸ் தள பக்கம் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இத்தனை ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியையும் சாராமல் இருந்து வந்த கஸ்தூரி, அண்மையில் பாஜக-வில் இணைந்தார். நடிகை கஸ்தூரிக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இவரின் கணவர் பெயர் ரவிக்குமார். அவர் ஒரு மருத்துவர். கஸ்தூரியின் மகன் பெயர் சங்கல்ப், மகள் பெயர் சோபினி.
55
கஸ்தூரி வீட்டின் மதிப்பு
கஸ்தூரியின் கணவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். நடிகை கஸ்தூரிக்கு சொந்தமாக சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீடு உள்ளது. அதன் மதிப்பு ரூ.108 கோடி இருக்குமாம். இந்த வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளதாம். நடிகை கஸ்தூரி படங்களில் நடிக்க ரூ.15 முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் சீரியலில் நடிக்க ஒரு எபிசோடுக்கு 30 ஆயிரம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது.