அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகி உள்ள பான் இந்தியா படம் தான் வார் 2. ஸ்பை யூனிவர்ஸை சேர்ந்த இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வந்தது. குறிப்பாக ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு போட்டியாக வார் 2 ரிலீஸ் ஆனது. இதில் கூலி படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் செம டஃப் கொடுத்து வந்தாலும் கூலி படத்தை முந்த முடியவில்லை. கூலி படம் இரண்டு நாட்களில் 230 கோடி வசூலித்துள்ளது.
25
வார் 2 படத்தின் 2ம் நாள் வசூல்
முதல் நாளைப் போல் இரண்டாவது நாளும் 'வார் 2' இந்தியாவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வெள்ளிக்கிழமை (2வது நாள்) இந்தப் படத்தின் வசூல் பிக் அப் ஆகி உள்ளது. ஏனெனில் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால் அன்றைய தினம் 'வார் 2' முதல் நாளை விட 9.7 சதவீதம் கூடுதலாக வசூலித்து உள்ளது. அதன்படி இப்படம் நேற்று மட்டும் 56.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
முதல் நாளில் 'வார் 2' சுமார் 51.50 கோடி ரூபாய் வசூலித்தது. இதன்படி பார்த்தால், இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் இதன் வசூல் சுமார் 108 கோடி ரூபாயாக உள்ளது. உலகளவில் இப்படத்தின் வசூல் 140 கோடியாகும். இரண்டு நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த இந்தப் படத்திற்கு மூன்றாவது நாளான சனிக்கிழமை ஜன்மாஷ்டமி விடுமுறை என்பதால், மூன்று நாட்களில் இதன் வசூல் இந்தியாவில் 150 கோடி ரூபாயைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
35
ஹிருத்திக் ரோஷனின் 100 கோடி வசூல் படங்கள்
'வார் 2' ஹிருத்திக் ரோஷனின் கெரியரில் 8வது 100 கோடி படமாகும். இதற்கு முன் அக்னிபத் (115 கோடி), க்ரிஷ் 3 (244.50 கோடி), பேங் பேங் (181 கோடி), காபில் (103.84 கோடி), சூப்பர் 30 (146.94 கோடி), வார் (318 கோடி) மற்றும் ஃபைட்டர் (205.55 கோடி) ஆகியவை இருந்தன. அதனுடன் தற்போது லேட்டஸ்டாக வார் 2 படமும் இந்த கிளப்பில் இணைந்துள்ளது.
'வார் 2' உலகளவில் ஜூனியர் என்.டி.ஆரின் நான்காவது அதிக வசூல் படமாக மாறியுள்ளது. இந்தப் படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இது அவரது 'ஜனதா கேரேஜ்' படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது, இது உலகளவில் 134 கோடி ரூபாய் வசூலித்தது. ஜூனியர் என்.டி.ஆரின் மற்ற 3 அதிக வசூல் திரைப்படங்கள் ஆர்.ஆர்.ஆர், தேவரா பகுதி 1 மற்றும் அரவிந்த சமேதா, இவற்றின் உலகளாவிய வசூல் முறையே 1275.51 கோடி ரூபாய், 428.39 கோடி ரூபாய் மற்றும் 160 கோடி ரூபாய் ஆகும்.
55
கியாரா அத்வானியின் 100 கோடி வசூல் படங்கள்
கியாரா அத்வானிக்கு 'வார் 2' அவரது கெரியரில் இதுவரை 5வது அதிக வசூல் செய்த பாலிவுட் படமாகும். இதற்கு முன்னர் அவர் நடித்த கபீர் சிங் 278.80 கோடி ரூபாயும், குட் நியூஸ் - 205.09 கோடி ரூபாயும், பூல் புலையா 2 - 184.32 கோடி ரூபாயும், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி - 133.09 கோடி ரூபாயும் வசூலித்திருந்தன.