Jyothika Speech: அவருக்கு ஹிந்தி பிடிக்காது - குடும்ப சீக்ரெட்டை ஓப்பனா சொன்ன நடிகை ஜோதிகா!

Published : Feb 20, 2025, 02:08 PM IST

எவர் கிரீன் நாயகியான நடிகை ஜோதிகா நேர்காணல் ஒன்றில் தன்னுடைய குடும்பம் பற்றி கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
Jyothika Speech: அவருக்கு ஹிந்தி பிடிக்காது - குடும்ப சீக்ரெட்டை ஓப்பனா சொன்ன நடிகை ஜோதிகா!
Jyothika debut Tamil movie

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜோதிகா, ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகளை வாரி வழங்கியது தமிழ் சினிமா தான். அஜித்தின் சூப்பர் ஹிட் படமான 'வாலி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமான படம் தான் 'பூவெல்லாம்  கேட்டுப்பார்'. இந்த படம் இவருக்கு பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக ஜோதிகா நடிப்பு பாராட்ட பட்டது.

26
Jyothika Is Top heroine in Tamil

அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்த ஜோதிகாவுக்கு, முதல் இண்டஸ்ட்ரியன் ஹிட் கொடுத்தது என்றால் அது, தளபதி விஜய்க்கு ஜோடியாக, ஜோ நடித்து 2000-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூரியா இயக்கத்தில் வெளியான, 'குஷி' திரைப்படம் தான். குஷி படத்தின் வெற்றி ஜோதிகாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இதன் பின்னர் டாப் ஹீரோக்களான அஜித், பிரஷாந்த், கமல்ஹாசன், மாதவன், என அணைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து, 90-ஸ் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் மாறினார்.

Jyothika: 47 வயசாகிடுச்சு; அதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடியே நிறுத்திட்டேன்! கூலாக சொன்ன ஜோதிகா!
 

36
Suriya and Jyothika Love

நடிகர் சூர்யா மீது முதல் படத்திலேயே ஜோதிகாவுக்கு கிரிஷ் ஏற்பட்டாலும், 'காக்கா காக்கா' படத்தில் இணைந்து நடிக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றியது. தங்களின் காதல் விஷயத்தை ரகசியாக வைத்திருந்த இந்த ஜோடி, போராடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

46
After Marriage Jyothika Quit Cinema

தமிழ்நாட்டு மருமகளாக மாறிய ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு முழுமையாக விலகினார். தற்போது இந்த ஜோடிகளுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். தியா - தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகிறார்கள். இருவருமே ஸ்போட்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் குழந்தைகள் வளர்ந்து விட்டதால், ஜோதிகா மீண்டும் நடிக்க துவங்கினார்.

பிரபல நடிகையின் காலில் விழுந்து வணங்கிய ஜோதிகா; வைரலாகும் போட்டோ அண்ட் வீடியோ!
 

56
Jyothika Surya upcoming Series Dabba Cartel

தற்போது தமிழ் படங்கள் மட்டும் இன்றி, ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைத்தான் மாற்று ஸ்ரீகாந்த் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து விரைவில் இவர் நடித்துள்ள டப்பா கார்டெல் வெப் தொடரும் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

66
Jyothika About Kids

இந்த நிலையில், தற்போது ஜோதிகா தன்னுடைய குடும்பம் பற்றி பகிர்ந்துள்ள சீக்ரெட் வெளியாகி உள்ளது. அதாவது ஜோதிகாவின் மகள் தியா நன்றாக ஹிந்தி பேசுவாராம். ஆனால் தேவுக்கு ஹிந்தி பிடிக்காதாம். ஜோதிகா ஏதாவது சொன்னால், தயவு செஞ்சு ஹிந்தி நகி மா அப்படினு சொல்லுவாராம். சூர்யா வீட்டில் இருக்கும் போது, நாங்கள் அதிகம் தமிழில் தான் பேசுவோம் என ஜோதிகா பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

காதலர் தின ஸ்பெஷல் “ கோலிவுட்டால் இணைந்த காதல் ஜோடிகள் ஒரு பார்வை!

click me!

Recommended Stories