முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் அள்ளிய ஒரே ஆள் இவர்தான்; யார் இந்த தமிழ் ஹீரோ?

Published : Feb 20, 2025, 01:53 PM IST

100 கோடி வசூல் என்பது சினிமாவில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது, அதை எட்ட பல முன்னணி நடிகர்களே பல வருடம் போராடி வரும் நிலையில், முதல் படத்திலேயே அந்த வசூல் சாதனையை படைத்த தமிழ் ஹீரோ பற்றி பார்க்கலாம்.

PREV
15
முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் அள்ளிய ஒரே ஆள் இவர்தான்; யார் இந்த தமிழ் ஹீரோ?
100 crore Box Office in First Movie

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை எட்டி வந்தன. மற்ற நடிகர்களுக்கு அது எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், பின்னர் போகப் போக தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற அடுத்த கட்ட நடிகர்களும் அந்த 100 கோடி வசூல் சாதனையை எட்டிப்பிடித்தனர். இவர்கள் எல்லாம் பல வருட போராட்டத்துக்கு பின்னரே 100 கோடி வசூலை எட்டி இருக்கும் நிலையில், ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே 100 கோடி வசூலை எட்டிப்பிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு தமிழ் ஹீரோ. அவரைப் பற்றி பார்க்கலாம்.

25
Comali Movie Pradeep Ranganathan

அந்த நடிகர் வேறுயாருமில்லை... பிரதீப் ரங்கநாதன் தான். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததால் சில குறும்படங்களை இயக்கி அதன் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றார். இதையடுத்து இவர் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்து இம்பிரஸ் ஆன நடிகர் ஜெயம் ரவி, அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் தான் கோமாளி.

இதையும் படியுங்கள்... டிராகன் படம் எப்படி இருக்கு? ரிலீசாகும் முன்னரே படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன சிம்பு

35
Love Today Hero Pradeep Ranganathan

முதல் படம் வெற்றியடைந்துவிட்டால் இரண்டாவது படத்திற்கு ஹீரோ ஈஸியாக கிடைத்து விடுவார்கள். ஆனால் பிரதீப்புக்கு அப்படி அமையவில்லை. அவரின் லவ் டுடே படத்தின் கதையை கேட்டு பல நடிகர்கள் நடிக்க மறுத்ததால் நொந்துபோன பிரதீப், தானே அப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக முடிவெடுத்தார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. தான் இயக்கிய ஆப் லாக் என்கிற குறும்படத்தை மையமாக வைத்து லவ் டுடே படத்தை எடுத்தார் பிரதீப்.

45
Love Today 100 Crore Collection

படம் வேறலெவலில் இருந்ததோடு, இளசுகளை பெரிதும் இம்பிரஸ் பண்ணியதால், கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் தயாரிப்பாளர்களும் இப்படம் மூலம் நல்ல லாபம் பார்த்தனர். இதன்மூலம் முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோ என்கிற சாதனையை படைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

55
Pradeep Ranganathan Movie Line Up

அவர் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகிறது. அதில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்துள்ள டிராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வருகிறது. இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பின்னர் மைத்ரீ மூவி மேக்கர் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!

Read more Photos on
click me!

Recommended Stories