ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து விஷயத்திலும், இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு காரணம்... ஜிவியுடன் 'பேச்சிலர்' படத்தில் நடித்த நடிகை திவ்யா பாரதி என கூறப்பட்டது. இந்த விஷயத்துக்கு, ஜிவி பிரகாஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் ஜிவி மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளிநாட்டில் நடந்த ஜிவியின் ம்யூசிக் கான்சர்ட்டில், சைந்தவி தன்னுடைய மகளை போ போய் அப்பா கூட டான்ஸ் ஆடு என கூறியதும், இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களும் வைரலானது.