Hansika Hot : டூபீஸில் கன்னாபின்னா கவர்ச்சி காட்டி... மாலத்தீவில் மஜா பண்ணும் ஹன்சிகா- வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published May 2, 2022, 10:23 AM IST

Hansika Hot : பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

சுராஜ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் பிரியாணி, ஆர்யாவுக்கு ஜோடியாக சேட்டை, சிம்புவின் வாலு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ஹன்சிகா.

இதில் வாலு படத்தில் நடித்தபோது நடிகர் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

பிரிவுக்கு பின்னர் நண்பர்களாக இருந்து வரும் சிம்புவும், ஹன்சிகாவும், தற்போது மஹா என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ஜமீல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான மஹா வருகிற மே 27-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றி உள்ளார்.

இதுதவிர ரவுடி பேபி, பார்ட்னர், மை3, தி 105 மினிட்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

அங்கு பிகினி உடை அணிந்து அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர் பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Ajith : உடல் எடை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய அஜித்.... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

click me!