மணிரத்னம் அழைத்தும் பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்... என்ன காரணம் தெரியுமா?

First Published | Sep 12, 2022, 3:12 PM IST

நடிகை அமலா பாலை பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் அணுகியும் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். ரூ.800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளார்.

இதுதவிர ஏ.ஆர்.ரகுமான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, தோட்டா தரணி கலை இயக்கம் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் பணியாற்றி உள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ஐந்தாவது சீசனைவிட 20 கோடி அதிகம்! ‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சிக்காக கமலுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tap to resize

இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய், மகேஷ் பாபு, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் இழந்துள்ளனர். அதேபோல் நடிகை அமலா பாலை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் அணுகியுள்ளார். ஆனால் அமலா பால் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

அவர் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தற்போது கூறி உள்ளார். அவர் கூறியதாவது : “நான் மணிரத்னம் அவர்களின் பெரிய ரசிகை. முன்னரே அவரது படத்திற்காக ஒரு ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அப்போது தேர்வாகவில்லை. பின்னர் 2021-ல் மீண்டும் ஆடிஷனுக்கு அழைத்தனர். ஆனால் அந்த கேரக்டரில் நடிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டேன். அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை” என அமலாபால் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அத்துமீறி கண்ணம்மாவை அடைய நினைக்கும் தீவிரவாதி..! அநீதியை கண்டு ஆர்ப்பரித்த பரபரப்பு தருணம்..! புரோமோ

Latest Videos

click me!