'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சர்ச்சையில் சிக்கி, நாட்டின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில், சஇப்படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகை ஆதா ஷர்மா, கருத்து சுதந்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மே 8 அன்று, மேற்கு வங்க அரசு வகுப்புவாத வெறுப்பு மற்றும் வன்முறை தொடர்பான எந்த ஒரு சம்பவத்தையும் தடுக்க வேண்டும் என்று கூறி ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதித்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிடவிடாமல் தடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தைக் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?
நடிகை ஆதா ஷர்மா இதுகுறித்து பேசுகையில், “கருத்து சுதந்திரத்தை கொண்டாட வேண்டும். திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். பின்னர் அவர்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க அனைவருக்கும் விருப்பம் உள்ளது” என்று கூறினார். இப்படத்தில், கேரளாவில் இருந்து காணாமல் போன பாத்திமா பா என்ற மலையாளி இந்து நர்சிங் மாணவியின் பாத்திரத்தில் அதா நடித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இது மனிதாபிமானம் மற்றும் பயங்கரவாதம். இது காதலில் ஏமாற்றப்படுவது பற்றியது. நீங்கள் ஏன் ஒருவரை கற்பழிக்கக்கூடாது என்பது பற்றி ஆகும். எனவே உலகில் எந்த இடத்திலிருந்தும் யாரும் இந்தப் படத்தை ஆதரிப்பது பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.