இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் 'மர்டர் லைவ்'. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது, '' ஹாலிவுட்டில் வெளியான 'ப்ளைன்ட் டேட்', 'ஸ்கை ஹை', 'டெர்மினல் எக்ஸ்போசர்', 'கிளிட்ச்', 'இன் தி கோல்ட் நைட்' ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கில படத்தை தழுவி 'மர்டர் லைவ்' எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... இரவு பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு... போதையில் குத்தாட்டம் ஆடிய நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ