50 வயசுலயும் தேவதை மாறி இருக்காங்களே! அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் வைரல் கிளிக்ஸ்..

Published : Sep 11, 2023, 12:37 PM IST

பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

PREV
18
50 வயசுலயும் தேவதை மாறி இருக்காங்களே! அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் வைரல் கிளிக்ஸ்..

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜயகுமாரும் ஒருவர். 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் விஜயகுமார். 1974-ல் வெளியான அவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் விஜயகுமார் நடித்துள்ளார்..தற்போது வரை நடித்து வரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள், அவர் 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

28

முத்துக்கண்ணு – விஜயகுமாருக்கும் பிறந்த குழந்தைகள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.

மகாபலிபுரத்தில் ஒரு மஞ்சக்காட்டு மைனா.. புது வீட்டில் நடந்த கிரகப்பிரவேசம் - கலக்கும் அருண் விஜய் அக்கா அனிதா!
 

38

விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

48

ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

58

சமீபத்தில் அனிதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விழாவில் விஜயகுமார், அருண் விஜய், கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என ஒட்டுமொத்த குடும்பமுமே கலந்து கொண்டனர்.

68

அதே போல் சமீபத்தில் நடந்த வரலட்சுமி பூஜையில் கவிதா, அனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது. மேலும் அனிதா சமீபத்தில் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலனாது. 

களைகட்டிய அனிதா விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்த வந்த சினிமா பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!
 

78

பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

88

இந்த நிலையில் அனிதா விஜயகுமார் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுளா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories