என்ன தலைவா இப்படி சிக்கிட்ட! 'ஜவான்' படம் இந்த தமிழ் படத்தின் அட்ட காப்பியாமே? அட்லீயை அலற விடும் நெட்டிசன்கள்

Published : Sep 09, 2023, 03:30 PM ISTUpdated : Sep 09, 2023, 05:24 PM IST

ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ஜவான் படம், சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் காப்பி என நெட்டிசன் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

PREV
16
என்ன தலைவா இப்படி சிக்கிட்ட! 'ஜவான்' படம் இந்த தமிழ் படத்தின் அட்ட காப்பியாமே? அட்லீயை அலற விடும் நெட்டிசன்கள்

ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், ஒரு திருவிழா கோலத்துடன், செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றனர். 

26

இந்த ஆக்சன் என்டர்டெய்னருக்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக ஹிந்தியில் 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்து, புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிசில் கிங் என்பதை ஷாருக்கான் மீண்டும் நிரூபித்தார். மேலும் இரண்டே நாளில் இப்படம் 275 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

40 வயதிலும் இப்படியா? டீப் நெக் உடையில்... லோ ஆங்கிள் போஸ் வேற.. கவர்ச்சியால் வெறியேற்றும் ஸ்ரேயா போட்டோஸ்!
 

36

இந்நிலையில் ஜவான் பட கதை, பிரபல தமிழ் படத்தின் காப்பி என, நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. X தளத்தில், 1989 ஆம் ஆண்டு வெளியான 'தாய் நாடு' என்ற தமிழ்த் திரைப்படத்தின் கதைக்களத்தை அட்லீ காப்பி அடித்து தான் 'ஜவான்' படத்தை இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

46

தாய் நாடு 1989 இல் வெளியானது. ஜவானில் SRK தந்தை மற்றும் மகன் என இரு வேடத்தில் நடித்துள்ளது போலவே சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த படத்தை ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியிருந்தார். இந்த  திரைப்படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, நெட்டிசன் ஒருவர், "ஜவான் அசல் தமிழ் பதிப்பு - 1989." இங்கே பார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாரிமுத்து மரணத்தால் 'ஏதிர்நீச்சல்' சீரியலில் ஏற்பட்ட மாற்றம்! அடுத்த ஆதி குணசேகரன் இந்த வெள்ளித்திரை பிரபலமா?
 

56
Atlee

அட்லீ தான் இயக்கிய படங்கள் அனைத்தையுமே ஹிட் கொடுத்திருந்தாலும், இவரின் படங்கள் அனைத்துமே காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. 'ராஜா ராணி' மௌன ராகம் படத்தின் காப்பி என விமர்சிக்க பட்டது. தெறி படம் 'சத்ரியன்' படத்தின் காப்பி என்றும், மெர்சல் 'மூன்று முகம்' படத்தின் காப்பி என்றும் விமர்சனத்திற்கு ஆளானது. அதே போல் 'பிகில்' படம்  தெலுங்கு குறும்படத் தயாரிப்பாளரான நந்தி சின்னி ரெட்டி தனது 'ஸ்லம் சாக்கர்' திரைப்படத்தைத் காப்பி அடித்து தான் அட்லீ இந்த படத்தை இயக்கினார் என குற்றம் சாட்டி இருந்தார்.
 

66

ஆனால் அப்படி இந்த ஒரு சர்ச்சையிலும், விமர்சனங்களிலும் சிக்காமல் இருந்து வந்த... 'ஜவான்' படமும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி என கூறலாம்.  'ஜவான்' படத்தின் ஷாருக்கான், நயன்தாரா, ரித்தி டோக்ரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் தீபிகா படுகோனேவும் நீட்டிக்கப்பட்ட கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jawan Day 2 Box Office: ஜெயிலர் வசூலை ஜெட் வேகத்தில் ஓரம்கட்டிய 'ஜவான்'! ஆல் ஏரியாவிலும் கிங் நிரூபித்த ஷாருக்
 

Read more Photos on
click me!

Recommended Stories