நடிகர் விஜய் நிராகரித்த 6 பிளாக்பஸ்டர் படங்கள்.. செம சான்ஸை மிஸ் பண்ண தளபதி.. ஏன் தெரியுமா?

First Published | Nov 25, 2023, 3:46 PM IST

விஜய் நிராகரித்த சில படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த பதிவில் விஜய் நிராகரித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தொடர் வெற்றிப்படங்கள் மூலம் வசூலை குவித்து வருவதால் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Thalapathy Vijay starrer Leos ott release update out

மேலும் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விஜய் உள்ளார். அவர் கடைசியாக நடித்த லியோ படத்திற்கு ரூ.120 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் நிராகரித்த சில படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த பதிவில் விஜய் நிராகரித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

Tap to resize

singam movie

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2010-ம் ஆண்டில் வெளியான சிங்கம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படமாகும். ஆறு, வேல் படங்களை தொடர்ந்து சூர்யா - ஹரி கூட்டணி 3-வது முறை கைகோர்த்தது. ஆனால் சிங்கம் படத்தின் ஹீரோவாக நடிக்க ஹரியின் முதல் சாய்ஸ் சூர்யா இல்லையாம். இந்த படத்திற்கு ஹரி முதலில் நடிகர் விஜய்யை அணுகியதாகவும், ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் விஜய் அப்படத்தில் மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. சிங்கம் படத்தின் மாபெரும் வெற்றி அடுத்தடுத்த பாகங்கள் உருவாக வழிவகுத்தது. ஹிந்தி (சிங்கம்), பெங்காலி (ஷோத்ரு), மற்றும் பஞ்சாபி (சிங்கம் என) உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

mudhalvan

ஷங்கர் - அர்ஜூன் கூட்டணியில் 1999-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் முதல்வன். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் ரகுவரன், மணிவண்னன், மனிஷா கொய்ராலா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் முதல்வன் பட கதையை ஷங்கர் முதலில் நடிகர் ரஜினிகாந்திடம் தான் கூறி உள்ளார். ஆனால் ரஜினி அந்த வாய்ப்பை மறுத்த நிலையில், அடுத்து விஜய்யை அணுகி உள்ளார் ஷங்கர். ஆனாலும் விஜய்யும் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் கமல்ஹாசனிடம் அந்த கதையை கூறினாராம் ஷங்கர். ஆனால் கமல்ஹாசனோ ஹேராம் படத்தில் பிசியாக இருந்தால் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் ஒருவழியாக நடிகர் அர்ஜுனை வைத்து முதல்வன் படத்தை இயக்கினார் ஷங்கர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த 2-வது தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

anekan

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அனேகன். பீரியாடிக்கல் லவ் ஸ்டோரியாக உருவான இப்படத்தில் ஹீரோவாக விஜய்யை நடிக்க வைக்க கே.வி திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் விஜய் கமிட் ஆனதால் அவரால் அனேகன் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த தகவலை கே.வி. ஆனந்தே ஒருமுறை தெரிவித்திருந்தார். சுவாரஸ்யமாக, நடிகர் விஜய் தனுஷை இப்படத்தில் நடிக்க வைக்க பரிந்துரைத்தாராம். தனுஷ் ஹீரோவாக நடித்த இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

Autograph

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிகரீதியாக வெற்றிபெற்ற மற்றொரு திரைப்படம் ஆட்டோகிராப். இயக்குனர் சேரன் இயக்கி நடித்திருந்த ஆட்டோகிராப் படம் 2004-ம் ஆண்டு வெளியானது. ரபுதேவா, அரவிந்த் ஸ்வாமி மற்றும் விஜய் ஆகியோர் திரைப்படத்தின் தலைப்பு வாய்ப்பை நிராகரித்தபோது, இயக்குனர் தானே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திற்கு மாதவன் முதல் சாய்ஸ் இல்லை. ஆம். ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் விஜய்யை லிங்குசாமி அணுகினர், ஆனால் சில காரணங்களால் விஜய் அப்படத்தில் மறுத்துவிட்டார். அதன்பின்னரே இந்த படத்தில் நடிக்க மாதவன் கமிட் ஆனார். 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்து அதிக லாபம் ஈட்டிய படமாகவும் மாறியது.

ஆகச்சிறந்த நடிகர் கமல்ஹாசன் ஏன் 2000-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பிலிம்ஃபேர் விருது கூட வாங்கவில்லை தெரியுமா?
 

sandakozhi

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. இந்த படத்தை விஜய் - ஜோதிகாவை வைத்து இயக்கவே இயக்குனர் லிங்குசாமி விரும்பி உள்ளார். ஆனால் விஜய் இந்த படத்தை நிராகரித்ததால் அவர் விஷாலை அணுகி உள்ளார். விஷாலுக்கு கதை பிடித்து போகவே உடனே ஓ.கே சொல்லி உள்ளார். விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் உள்ளிட்ட நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக சண்டக்கோழி உருவானது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. மேலும் இப்படம் 2005 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.. 

Latest Videos

click me!