விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இதையடுத்து, இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை விஜயின் ரசிகர்கள் சிலர் தாக்கியதாகவும், கடத்தி சென்றதாகவும் கூறப்பட்டது. பின்னர் போலீசார், செய்தியாளர்களை தாக்கிய 3 பேரை .கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இருந்து விஜய் பாடி வெளியான, ரஞ்சிதமே பாடல்... சில சர்ச்சைகளில் சிக்கினரும் செம்ம வைரலாக மாறியது. எனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அணைத்து பாடல்களையும் கேட்க ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள்.
ஏற்கனவே விஜய்யின் தாயார் ஷோபா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, விஜய்யின் மாமனார் முன்னிலையில், எஸ் கே சி மற்றும் விஜய்க்கு இடையே உள்ள பிரச்சனை குறித்து பஞ்சாயத்து நடைபெற உள்ளதாக கூறப்பட்டதால், இதற்கான பஞ்சாயத்துக்கு சைலண்டாக தயாராகி வருகிறாராம் எஸ்.ஏ.சி... ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.