தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.
அதேபோல் தற்போது வரை கவர்ச்சிக்கு தடை போடாமல்... விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை instagram பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ரேயா, நடிகை நயன்தாராவின் திருமண சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஸ்ரேயா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் என்றால் அது சிம்புவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் தான். இதை தொடர்ந்து 'சண்டக்காரி' என்கிற படத்தில் நடித்து வந்த நிலையில், இன்னும் இப்படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
தற்போது இவரது கைவசம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் மியூசிக் ஸ்கூல் என்கிற படைக்கும் கன்னட திரைப்படமான கப்சா ஆகிய படங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.