அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தாந் அனிகா. இப்படத்தின் வெற்றிக்கு, இவருக்கும் அஜித்துக்கும் இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ரி ஒர்க் அவுட் ஆனதும் முக்கிய காரணம்.
இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக அறிமுகாகி உள்ளார். அதன்படி இவர் புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகை அனிகா நேற்று தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அவர் ஹீரோயின் ஆன பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாள் விழாவில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.